தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்காவின் தூதராக வேண்டுமா ? உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவின் தூதராக வேண்டுமா ? உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பு

Rasus

வண்டலூர் உயிரியல் பூங்கா தூதர் ஆக உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வழங்குகிறது.

இயற்கை பாதுகாப்பு, உயிரியல் மற்றும் பூங்காவின் பலதரப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிய உங்கள் குழந்தைகளுக்கு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஒரு வாய்ப்பை வழங்குகறிது. அதாவது குழந்தைகளுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. 5-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள பள்ளி மாணவர்கள் மட்டுமே இப்பயிற்சியில பங்குபெற முடியும். ஒரு குழுவுக்கு 35 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மொத்தம் 6 குழுக்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

குழு 1: டிசம்பர் 16-17
குழு 2: டிசம்பர் 18-19
குழு 3: டிசம்பர் 20-21
குழு 4: டிசம்பர் 22-23
குழு 5: டிசம்பர் 26-27
குழு 6: டிசம்பர் 28-29

காலை 9 மணி முதல் மதியம் 1 வரை பயிற்சி வழங்கப்படும். இதற்காக 09.12.2018 நண்பகல் 12 முதல் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். (https://www.aazp.in/winercamp)

முன்பதிவு கட்டணமாக ஒரு குழந்தைக்கு ரூபாய் 500 வசூலிக்கப்படுகிறது. பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் குழந்தைகளுக்கு “வண்டலூர் உயிரியல் பூங்காவின் தூதர்” என்ற சான்று வழங்கப்பட்டு அவர்கள் ஒரு வருடத்திற்கு இலவசமாக (10 முறை) வண்டலூர் பூங்கா வந்து செல்ல பாஸ்போர்ட் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 89039 93000 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.