SETC file image
தமிழ்நாடு

கோடை காலத்தில் உயர்கிறதா SETC ஏசி பஸ் கட்டணம்? - அதிகாரிகள் விளக்கம்

சாதாரண நாட்களில் ஏ.சி பேருந்துகளில் அளிக்கப்பட்ட கட்டண சலுகை கோடை விடுமுறை காலத்தில் இருக்காது என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Snehatara

சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக தொலைதூரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஏ.சி பேருந்துகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இதில் பயணிகளின் வசதிக்காக சாதாரண நாட்களில் அவர்களின் கட்டணத்தில் பத்து சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. பயணிகள் சேவையை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வார விடுமுறை, அரசு பண்டிகை நாட்களில் வழக்கமான பேருந்து கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பொதுவாக கோடைகாலம் வந்தாலே வெளியூர்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பிற நாட்களைவிட அதிகரித்தே காணப்படும். எனவே சாதாரண நாட்களில் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பத்து சதவீத சலுகை கோடை விடுமுறை காலத்தில் கிடைக்காது என உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதேபோல் கட்டணம் உயர்வு என சமூக வலைதளத்தில் பரவும் தகவல் தவறானது என்றும், போக்குவரத்து துறை அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பு இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.