rahul gandhi pt web
தமிழ்நாடு

ஆட்சி அமைக்க பாஜக கூட்டணி கட்சிகளான ஐஜத, தெ.தேசம்-க்கு அழைப்பு விடுக்கப்படுமா? - ராகுல் சொன்ன பதில்

PT WEB

மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மாலை இரவு 8 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களிலும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

முன்னதாக இன்று மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி எம்பி செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது ராகுல் காந்தி பேசும் போது:

“அமலாக்கத்துறை, சிபிஐ, நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்து துறைகளும் மோடிக்கு ஆதரவாக இருக்க நாங்கள் அனைத்தையும் எதிர்த்து சண்டை செய்தோம்.

இந்திய கூட்டணி தலைவர்கள், தொடண்டர்கள், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் என அனைவருக்கும் என எனது மனதில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன்.

நாட்டை ஆள்வதில் மோடி, அமித் ஷா பங்கெடுப்பது எங்களுக்கு விருப்பமில்லை என மக்கள் சொல்லிவிட்டார்கள். அமேதி தொகுதியின் வெற்றி மிக முக்கியமானது. எங்கள் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவை மிக கேவலமாக பேசினார்கள். ஆனால் அவர் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார்.

ஐஜத, தெ.தேசம்-க்கு அழைப்பா?

பாஜக கூட்டணியில் உள்ள ஐஜத, தெலுங்கு தேசம் கட்சிகளை ஆட்சி அமைக்க அழைப்பது குறித்து நாளை முடிவு செய்யப்பட்டும். கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். அவர்களிடம் பேசி முடிவு செய்வோம். நாளை கூட்டம் நடக்க உள்ளது.

ரேபரேலி, வயநாடு இரண்டு தொகுதி மக்களுக்கும் நன்றி. இரு தொகுதிகளில் எதை தக்க வைப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. எங்கள் சண்டை இன்னும் ஓயவில்லை. மக்களின் நலனுக்கான எங்களின் போர் தொடரும்.

தேசம் மோடியை புறக்கணித்துவிட்டது

மக்களவைத் தேர்தலில் மக்கள் பிரதமர் மோடியை புறக்கணித்துவிட்டனர். விவசாயிகள், ஏழைகள், பட்டியலின மக்கள்தான் அரசியல் சாசனத்தை காப்பாற்றியுள்ளனர்” என்றார்.