கடந்த ஜூன் 1ம் தேதி நடைபெற்ற 2024 மக்களை தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், 20 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டது. இவையன்றி இதன் கூட்டணி கட்சிகளான பாமக 10, த.மா.கா - 3, அ.ம.மு.க. - 2, புதிய நீதிக்கட்சி - 1, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - 1, இந்திய ஜனநாயக கட்சி - 1, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் - 1 இடங்களில் போட்டியிட்டன.
இப்படியாக தமிழ்நாட்டில் மொத்தமாக 39 மக்களவை தொகுதிகளும் களம் கண்ட பாஜக கூட்டணியில், இதுவரை ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்றுவருகிறது. பாஜகவின் கூட்டணி கட்சியான பாமகவை சேர்ந்த தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி தற்போதுவரை முன்னிலை வகித்துவருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கோவை தொகுதியில் நின்ற தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வெற்றி கிட்டுமா என்ற எதிர்பார்ப்பில் பாஜக ஆதரவாளர்கள் இருந்துவருகின்றனர்.
கோவை தொகுதியை பொறுத்தவரையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது வரை இரண்டாவது இடத்தில் மட்டுமே நீடித்து வருகிறார்.
முதல் இடத்தில் இருக்கும் திமுகவின் கணபதி ராஜ்குமாரை (81480) விட, தற்போதைய நிலவரப்படி 18994 வாக்குகள் பின்தங்கியிருக்கிறார் அண்ணாமலை (62486). கொங்கு மண்டலத்தில் செல்வாக்குள்ள அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.