விவசாய நிலங்களை பாழாக்கும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல வனத்துறையின் ஒன்பது கோட்டங்களின் அதிகாரிகளுக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வேளாண் விளைபொருட்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ஓசூர், கோவை, மதுரை, சேலம், ஹாசனூர், சத்தியமங்கலம் ஆகிய 9 வன கோட்டங்களின் வனத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி கடந்த ஜூன் 4ஆம் தேதி சுற்றசூழல் மற்றும் வனத்துறை அரசாணை வெளியிட்டது.
மலைப்பிரதேசங்களில் பயிர்களை காட்டுப் பன்றிகள் அழித்து வருவதால், அவற்றை சுடுவதற்கு அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி கொடைக்கானலைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.