திருவாரூரில் வரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி . இவரது மகள் சத்யா. அதே கிராமத்தை சேர்ந்த சாமியப்பன் மகன் செங்குட்டுவன். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு சாணக்கியன், கீர்திகா ஸ்ரீ, என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் கணவர் செங்குட்டுவன், சத்யாவிடம் அடிக்கடி வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பு வரை சென்றுள்ளது. இதில் சத்யாவை அடித்துக் கொலை செய்த கணவர் அவரை காரில் ஏற்றியுள்ளார். இதனை பார்த்த சத்யாவின் உறவினர்கள் காரை மறித்து உடைத்துள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த நீடாமங்கலம் போலீசார், இந்த சம்பவம் கொலையா, தற்கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.