தமிழ்நாடு

வன்கொடுமைகளுக்கு பெண்கள் அணியும் ஆடைகளை குறை சொல்வதா?: கமல்ஹாசன் கேள்வி

Sinekadhara

அரைகுறை ஆடையோடு இருக்கும் கடவுளை பார்க்கும்போது தோன்றாத, வன்கொடுமை எண்ணம் நமது சகோதரிகளை பார்க்கும்போது மட்டும் ஏன் தோன்றுகிறது என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை மேற்கொண்டு வரும் அவர், இன்றைய தினம் சென்னையில் அக்கட்சியின் மகளிரணி கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் அணியும் ஆடை காரணமாக கூறப்படுவது தவறானது எனக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் கூறும்போது, “ வன்கொடுமைகளுக்கு பெண்கள் அணியும் ஆடைகளே காரணமாக கூறப்படுகிறது. கடவுள் கூடதான் அரைகுறை ஆடையோடு இருக்கிறார். சில கடவுள்கள் ஆடையே அணிவதில்லை. அதைப் பார்க்கும்போது தோன்றாத வன்கொடுமை எண்ணம் எனது சகோதரிகளை பார்க்கும்போது எப்படி தோன்றுகிறது.”என்றார்.