தமிழ்நாடு

“அரசியல்வாதிகளை விமர்சித்தால் நடவடிக்கை; அதே நீதிபதிக்கு கிடையாதா?” - நீதிபதி கிருபாகரன் கேள்வி

“அரசியல்வாதிகளை விமர்சித்தால் நடவடிக்கை; அதே நீதிபதிக்கு கிடையாதா?” - நீதிபதி கிருபாகரன் கேள்வி

rajakannan

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், தகுதி நீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தரும் இருவேறு தீர்ப்புகளை அளித்தனர். இதனால், மூன்றாவது நீதிபதிக்கு தீர்ப்பு சென்றுள்ளது. தீர்ப்பு வெளியான நாளில் இருந்து பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்கள் கூட தீர்ப்பு குறித்த விமர்சனங்களை முன் வைத்தனர். இதில், சமூக வலைத்தளங்களில் சிலர் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சித்து கருத்துப் பதிவிட்டதாக கூறப்படுகிறது. 

தலைமை நீதிபதி விமர்சிக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் காவல்துறைக்கு சரமாரியாக கேள்விகளை முன் வைத்தார்.

நீதிபதி கிருபாகரன் எழுப்பிய கேள்விகள்:-

  • குறிப்பிட்ட நீதிபதியை விமர்சித்து பேசியவர்கள் மீது காவல்துறை ஏன் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவில்லை?
  • அரசியல்வாதிகளை விமர்சித்தால் நடவடிக்கை எடுப்பீர்கள். நீதிபதியை விமர்சித்தால் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை.
  • தீர்ப்புகளை விமர்சிக்கலாம். தீர்ப்பு அளித்த நீதிபதிகளை விமர்சிப்பது எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

இதனையடுத்து, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்