keeladi pt desk
தமிழ்நாடு

கீழடியில் அகழாய்வு பணி குறித்த அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடாமல் இருப்பது ஏன்?

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வின் முடிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும், மத்திய அரசு அறிவிப்புகள் எதுவும் வெளியிடாமல் இருக்கிறது. இதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

webteam

சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் துறை சார்பாக 2014 ஆம் ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகள் அகழாய்வு நடைபெற்றது. தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த அகழாய்வு குறித்து இந்த வருட தொடக்கத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும், மத்திய அரசு இதுகுறித்து அறிவிப்புகளை வெளியிடாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

keeladi

தமிழர் வரலாற்றை நிரூபிக்க இலக்கிய மற்றும் கல்வெட்டு சான்றுகள் இருந்தாலும் அறிவியல் பூர்வமாக வரையறுக்க தொல்லியல் சான்று அவசியமானது.

கீழடி அகழாய்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டால் மட்டுமே நாடு முழுவதும் தமிழர்களின் வரலாறு கொண்டு செல்லப்படும்
வரலாற்று பேராசிரியர் மாரப்பன்

எனவே மத்திய அரசு கீழடி குறித்த அறிவிப்புகளை விரைந்து வெளியிட வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தங்களது கோரிக்கையை முன்வைக்கிறார்கள்