தமிழ்நாடு

கொரோனா மருந்து: வேண்டாம் என்கிறது WHO! - பயனளிப்பதாக சொல்லும் தமிழக அரசு?!

கொரோனா மருந்து: வேண்டாம் என்கிறது WHO! - பயனளிப்பதாக சொல்லும் தமிழக அரசு?!

jagadeesh

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டிசிவிர் மருந்தை உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது.

ரெம்டிசிவிர் மருந்தை உலகம் முழுவதும் உள்ள 50 க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலிலிருந்து ரெம்டிசிவிர் மருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை எடுத்துக்கொண்ட 7 ஆயிரம் கொரோனா நோயாளிகளிடம் உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது.

அதில், கொரோனா தொற்றுக்கு ஆளான நோயாளிகளின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது உறுதியானது. இதனையடுத்து கொரோனா பாதிப்புக்கு ரெம்டிசிவிர் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதனிடையே கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் மருந்து நல்ல பலனை அளிக்கிறது என தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.