தமிழ்நாடு

கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் யாருக்கு?: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் யாருக்கு?: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

webteam

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் சாதி ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் செயல்படும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தார். அதற்கு கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. அதனை ரத்து செய்யக் கோரி ஜோசப் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் இல்லை எனில் வேறு யாருக்கு அந்த அதிகாரம் உள்ளது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என ஜோசப் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.