மழை PT web
தமிழ்நாடு

மக்களே உஷார்! 5 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்.. சென்னைக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட்!

தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rishan Vengai

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, நாமக்கல், அரியலூர், திருச்சி, கரூர், திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 16-ம் தேதிஅன்று ரெட் அலர்ட்..

வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் 20-ம் தேதிகளில் தொடங்கும் நிலையில், இம்முறை 5 நாட்களுக்கு முன்பே தொடங்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா பகுதிகளில் அக்டோபர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும், அடுத்த இரண்டு நாட்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அக்டோபர் 15-ம் தேதி ஆரஞ்சு அலர்ட்டும், அக்டோபர் 16-ம் தேதி ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை உடன் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் அக்டோபர் 16ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.