தமிழ்நாடு

கடந்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் குறைவாக வாக்குப்பதிவான தொகுதிகள் எவை?

கடந்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் குறைவாக வாக்குப்பதிவான தொகுதிகள் எவை?

webteam

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழகத்திலுள்ள வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அண்மையில் வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் மொத்தமாக 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2009 மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் குறைவாக வாக்குப்பதிவான தொகுதிகளைப் பற்றி பார்ப்போம். 

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் 72.94 ஆக இருந்தது. இந்தத் தேர்தலில் குறைவாக வாக்குப்பதிவான தொகுதிகள்: 

மத்திய சென்னை    61.04%
தென் சென்னை    62.68%
வட சென்னை    64.92%
கன்னியாகுமரி    65.22%
ஶ்ரீபெரும்பதூர்    66.09%

இதனையடுத்து நடைபெற்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே தொகுதிகளில்தான் குறைவாக வாக்குக்கள் பதிவாகின. அதாவது இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் 73.74 ஆகயிருந்தது. இத்தேர்தலில் குறைவாக வாக்குப்பதிவான தொகுதிகள்: 

தென் சென்னை    60.44%
மத்திய சென்னை    61.39%
வட சென்னை    64.01%
ஶ்ரீபெரும்பதூர்    66.10%
கன்னியாகுமரி    67.53%

இந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் குறைவாக வாக்குப்பதிவான தொகுதிகள் உள்ளடக்கிய பகுதிகளை பார்ப்போம்.

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திருவொற்றியூர், ஆர்கே நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்தத் தொகுதியில் 2014ல் 1422392 வாக்காளர்கள் இருந்தனர். . 

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வில்லிவாக்கம், எழுப்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், அண்ணா நகர் போன்ற பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இந்தத் தொகுதியில் 2014ல் 1328038 வாக்காளர்கள் இருந்தனர். 

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி விருகம்பாக்கம், தியாகராய நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. 2014ல்  1795776 வாக்காளர்கள் இருந்தனர். 

ஶ்ரீபெரும்பதூர் நாடாளுமன்றத் தொகுதி மதுரவாயில், அம்பத்தூர், தாம்பரம், ஆலந்தூர், பல்லாவரம், ஶ்ரீபெரும்பதூர் போன்ற பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இத்தொகுதியில் 2014ல் 1946503 வாக்காளர்கள் இருந்தனர்.  

வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை மற்றும் ஸ்ரீபெரும்பதூர் ஆகிய நான்கு தொகுதிகளிலும் பெண்களை விட ஆண்களே அதிகம் வாக்களித்துள்ளனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி கன்னியாகுமரி, நாகர்கோயில், பத்மநாபபுரம், விளவன்கோடு, கிளியனூர், குளச்சல் ஆகியவற்றை கொண்டுள்ளது. இத்தொகுதியில் 2014ல் 1467796 வாக்காளர்கள் இருந்தனர். இத்தொகுதியில் மட்டும்தான்  ஆண்களைவிட பெண்கள்  அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.   

ஜனநாயகத்தில் மக்களின் முக்கிய கடமை தங்களின் பிரதிநிதிகளை தாங்களே வாக்களித்து தேர்ந்தேடுப்பதுதான். எனவே வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் நமது ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம். மேலும் நாம் அனைவரும் வாக்குகளை பணத்திற்காக விற்கமாட்டோம் என உறுதிமொழியேற்போம்.

என் வாக்கு விற்பனைக்கு அல்ல. My vote is not for sale...
என் வாக்கு விற்பனைக்கு அல்ல. My vote is not for sale...