stalin, annamalai, edappadi palanisamy pt
தமிழ்நாடு

மக்களவை தேர்தல் 2024: 9 இடங்களில் நேருக்கு நேர் மோதும் திமுக - அதிமுக - பாஜக.. எங்கெங்கு யார் யார்?

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் நேரடியாக திமுக - அதிமுக - பாஜக கட்சிகள் மோதிக்கொள்ளும் தொகுதிகளை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு

யுவபுருஷ்

நாடு முழுவதும் ஜனநாயகப் பெருவிழா தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக அனைத்துத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி (திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி) நிலவுகிறது.

இதில் சீமானின் நாம் தமிழர் கட்சியைத் தவிர பிற கட்சிகள் எல்லாம் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. அந்த வகையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் அக்கட்சிகள் விரும்பிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதில் 4 கட்சிகள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.

தேர்தல் வாக்குப்பதிவு தேதி நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆங்காங்கே பரப்புரையை தொடங்கிவிட்டன. முதற்கட்டமாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.கஸ்டாலின் திருச்சியில் இருந்து நேற்று பரப்புரையை தொடங்கினார்.

மற்ற கூட்டணி கட்சிகளும் பரப்புரையை தொடங்கிவிட்டன. இந்நிலையில், கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன என்பதை பார்க்கலாம்.

தொகுதி: திமுக - அதிமுக - பாஜக

சென்னை வடக்கு: கலாநிதி வீராசாமி - ராயபுரம் ஆர் மனோ - பால் கனகராஜ்

சென்னை தெற்கு: தமிழச்சி தங்கபாண்டியன் - ஜெயவர்தன் - தமிழிசை சௌந்தரராஜன்

கோவை: கணபதி பி. ராஜ்குமார் - சிங்கை ஜி ராமச்சந்திரன் - அண்ணாமலை

நாமக்கல்: வி.எஸ் மாதேஸ்வரன்(கொ.ம.தே.க) - எஸ். தமிழ்மணி - கே.பி. ராமலிங்கம்

நீலகிரி: ஏ. ராஜா - டி.லோகேஷ் தமிழ்செல்வன் - எல்.முருகன்

பெரம்பலூர்: அருண் நேரு - என்.டி. சந்திரமோகன் - பாரிவேந்தர்(ஐ.ஜே.கே)

பொள்ளாச்சி: கே.ஈஸ்வரமூர்த்தி - ஏ.கார்த்திகேயன் - கே.வசந்தராஜன்

திருவண்ணாமலை: சி.என். அண்ணாதுரை - எம். கலியபெருமாள் - ஏ.அஸ்வத்தாமன்

வேலூர்: டி.எம். கதிர் ஆனந்த் - எஸ்.பசுபதி - ஏ.சி.சண்முகம்(என்.ஜி.பி)

அந்த வகையில் 9 இடங்களில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியோர் நேரடியாக தங்களது சின்னங்களில் களம் காண்கின்றனர்.