தவெக தலைவர் விஜய் pt desk
தமிழ்நாடு

விக்கிரவாண்டியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 100 அடி உயரத்தில் தொடர்ந்து பறக்கப்போகும் தவெக கொடி..!

விக்கிரவாண்டியில் தவெக-வின் மாநாட்டு பந்தல் எதிரில் 100 அடிக்கு தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்றப்படுகிறது. விஜய் ஏற்றிவைக்க உள்ள இந்த கொடி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பறக்கவிருக்கிறது.

PT WEB

செய்தியாளர்: ஸ்ரீதர்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு வருகின்ற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ‘வி சாலை’யில் நடைபெறுகிறது. இதில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பின் சிறப்புரையாற்றுகிறார்.

தவெக முதல் மாநாடு

இந்த மாநாடு நடைபெறும் இடம் 80 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 27 விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் இம்மாநாட்டுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்மாநாட்டில் விஜய் ஏற்றப்போகும் நூறடி உயர கொடி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதே இடத்தில் பறக்கும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தவெக சார்பில், மணி என்ற விவசாயிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், வரும் அக்டோபர் 27ம் தேதி மாலை 4.30 முதல் 6 மணி ராகுகாலம் இருப்பதால் அதற்குபிறகு நல்லநேரத்தில் விஜய் மாநாட்டிற்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

த.வெ.க. தலைவர் விஜய்

இந்த மாநாடானது மற்ற கட்சிகளின் மாநாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.