தமிழ்நாடு

கோயம்பேடு மொத்த பழ விற்பனை அங்காடியை திறப்பது எப்போது?

webteam

கோயம்பேடு மொத்த பழ விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு 4வது நுழைவு வாயில் கனி மொத்த வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் செயலாளர் எம்.செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உணவுதானியம் மற்றும் காய்கறி மொத்த விற்பனை அங்காடி மட்டும் திறக்க அனுமதிக்கபட்டுள்ள நிலையில், கனி மொத்த விற்பனை அங்காடி திறக்காததால் 700க்கும் மேற்பட்ட வணிகர்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.