தெருநாய்கள் முகநூல்
தமிழ்நாடு

தெருநாய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை? - கேள்வி எழுப்பிய நீதிபதி!

பொதுமக்கள் தெருநாய்களால் பாதிக்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

PT WEB

பொதுமக்கள் தெருநாய்களால் பாதிக்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது எனக் கூறிய நீதிபதிகள், தமிழகத்தில் பல இடங்களில் தெருநாய்கள் பொதுமக்களை தாக்கும் நிலை இருந்து வருவதாக கூறினர். பொதுமக்கள் தெருநாய்களால் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

தெரு நாய்களை கண்டறிந்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி சரியான முறையில் தடுப்பூசி போட்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என குறிப்பிட்டனர்.

கால்நடைதுறையின் மதுரை மாவட்ட விலங்குகள் நல வாரிய அதிகாரி , தெரு நாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.