தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வெற்றி சதவீதம் - ஒரு பார்வை

சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வெற்றி சதவீதம் - ஒரு பார்வை

kaleelrahman

2021 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்றுள்ள வெற்றி விகிதங்கள் என்ன? விரிவான விவரங்களை பார்க்கலாம்.

2021 தேர்தலில் கட்சிகளின் வெற்றிவிகிதம். கட்சி போட்டியிட்டது. வெற்றி பெற்றது வெற்றி விகிதம்

திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 127 தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி பெற்ற வெற்றி விகிதம் 73. இதுவே தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளின் வெற்றி விகிதத்தில் அதிகமாகும். திமுகவின் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி இத்தேர்தலில் 72 சதவிகித வெற்றி பெற்றுள்ளது.

மதிமுக 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி 67 சதவிகித வெற்றியை பெற்றுள்ளது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டதில் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் வெற்றிவிகிதம் 67 சதவிகிதம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டதில் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி 33.33 சதவிகித வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் வெற்றி சதவிகிதம் 33.33. 

அதிமுக 179 இடங்களில் போட்டியிட்டதில் 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி 37 சதவிகித வெற்றி பெற்றுள்ளது. பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் வெற்றி சதவிகிதம் 20 ஆக உள்ளது. பாமக 23 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் வெற்றி விகிதம் 25 ஆக உள்ளது.

போட்டி - வெற்றி - சதவிகிதம்

  • திமுக             : 173 - 127 - 73%
  • காங்கிரஸ்      : 25 - 18 - 72%
  • மதிமுக           : 6 - 4 - 67%
  • விசிக               : 6 - 4 - 67%
  • இந்திய கம்யூ. : 6 - 2 - 33.33%
  • மார்க்சிஸ்ட்     : 6 - 2 - 33.33%
  • அதிமுக           : 179 - 66 - 37%
  • பாஜக               : 20 - 4 - 20%
  • பாமக               : 23 - 5 - 25%