மெத்தனால் vs எத்தனால் முகநூல்
தமிழ்நாடு

மெத்தனால் vs எத்தனால் - என்ன வித்தியாசம்? எங்கெல்லாம் பயன்படுத்தப்படும்?

கள்ளக்குறிச்சியில் உயிர்களை பறித்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருந்தது தெரியவந்தது. உயிரைப் பறிக்கும் நச்சுத்தன்மைக் கொண்ட மெத்தனால் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது? எந்தெந்த துறைகளில் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது? பார்க்கலாம்.

PT WEB

உச்சரிக்கும்போது கூட ஒரு எழுத்து மட்டுமே மாற்றமாக ஒலிக்கும். மெத்தனால், எத்தனால் ஆகிய இரண்டுமே ஆல்கஹால்தான்.

எத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் எத்தனால், பழச்சாறுகளை நொதிக்கச் செய்வதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு, சோளம், கோதுமை, கம்பு, பார்லி போன்ற தானியங்களில் இருந்தும் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.

ஆனால் உயிரையே பறிக்கும் அளவிற்கு அதிக நச்சுத்தன்மை கொண்டதுதான் மெத்தனால். கள்ளக்குறிச்சி விவகாரத்திலும் மெத்தனால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மெத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் இந்த மெத்தனால், தொடக்கத்தில் மரப்பட்டைகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. பல தொழிற்துறைகளில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் தற்போது பெட்ரோலிய நாப்தாவிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.

மெத்தனால் - தீமைகள்

இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுநீர், நிலக்கரி உற்பத்தி, கெட்டுப்போன கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்டவைகளில் இருந்தும் மெத்தனால் தயாரிக்கப்படுகிறது. அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தனால் எளிதில் தீப்பற்றக்கூடியது. இதை மதுபானமாக அருந்தினால் கண் பார்வை போவதோடு உயிரிழக்கும் நிலையும் ஏற்படும்.

மெத்தனால் எங்கே பயன்படுத்தப்படும்?

அதிக நச்சுத்தன்மை கொண்ட மெத்தனால் ரசாயன துறைகளில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அசிடிக் அமிலம் தயாரிக்க மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் தயாரிப்பதற்கு, பெயிண்ட் தயாரிக்கும் துறையிலும், ஜவுளித்துறையில் செயற்கை நூலிழைகள் தயாரிப்பதற்கும் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. மின்னுற்பத்திக்கான கருவிகள், RECHARGEABLE பேட்டரிகள், கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி, வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு ஆலைகளிலும் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது.