பக்ரீத் பண்டிகை pt
தமிழ்நாடு

எதனால் பக்ரீத் கொண்டாடப்படுகிறது? பண்டிகையின் பின்னணி என்ன?

உலகளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத். இறைவனின் தூதரான இப்ராகிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

PT WEB

இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம். இவர் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்தவர். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தநிலையில், இறைவன் அருளால், ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இஸ்மாயில் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழிவந்தவர்களே இன்றைய அரேபியர்கள் என கூறப்படுகின்றது. இப்ராஹிமின் மகன் இஸ்மாயில் பால்ய பருவத்தை அடைந்தபோது, அவரை தனக்கு பலியிடுமாறு இப்ராஹிமின் கனவில் கடவுள் கட்டளையிட்டதாக கூறப்படுகிறது.

இதைப்பற்றி மகனிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபோது, வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்ததாகவும், மேலும் ஒரு ஆட்டை கொடுத்த இறைவன், இஸ்மாயிலுக்கு பதிலாக ஆட்டை பலியிடுமாறு இப்ராஹிம்-க்கு கட்டளையிட்டதாகவும் நம்பப்படுகிறது.

அதனடிப்படையிலேயே பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

பக்ரீத் அன்று என்ன கொண்டாடப்படுகிறது?

பக்ரீத் பண்டிகையான தியாகத் திருநாளன்று இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதோடு, புத்தாடை அணிந்தும், தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு அதனை மூன்று பங்குகளாக பிரித்து அண்டை வீட்டார், ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பதாகவும் நம்பப்படுகிறது