தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுவில் வாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் விபரங்கள் என்னென்ன?

அதிமுக பொதுக்குழுவில் வாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் விபரங்கள் என்னென்ன?

kaleelrahman

வரும் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடுவதாக அக்கட்சித் தலைமை கழகத்திலிருந்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மூன்று பக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், கழக பொதுக்குழு உறுப்பினர்களில், ஐந்தில் ஒரு பகுதி (1/5) என்ற எண்ணிக்கையினர், கழக பொதுக்குழு கூட்டத்தை, கழக சட்ட திட்ட விதி 7-ன் படி உடனடியாக கூட்டுமாறு, 23.06.2022 அன்று நடைபெற்ற கழக பொதுக்குழுவில் விண்ணப்பித்ததன் அடிப்படையில் இந்தப் பொதுக்குழுவானது கூட்டப்படுகிறது.

இந்தப் பொதுக்குழுவில் தீர்மானிக்க வேண்டி பொறுண்மை விபரங்களை 2432 கழக பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழுக் கூட்டம் 11.07.2022 - திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு, திருவள்ளூர் மாவட்டம், வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் கூட்டப்படுகிறது .

இதில், கழக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடும், தங்களுக்கான அடையாள அட்டையோடும் தவறாமல் வருகை தந்து , உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், கழக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பொதுக்குழுக் கூட்டத்தில், வாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் பொறுண்மை விபரங்கள் :

1.கழக அமைப்புத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தல்.

2.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்கு ' பாரத் ரத்னா ' விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்.

3. கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும்

4. கழக பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது

5 கழக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது

6. கழக இடைக்கால பொதுச் செயலாளரை, நடைபெற உள்ள கழக பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல்.

7.கழக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்ய வேண்டுதல் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.