bus strike pt desk
தமிழ்நாடு

வேலை நிறுத்தப் போராட்டம்: போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் என்ன?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வைததுள்ள 6 அம்ச கோரிக்கைகள் என்னென்ன? விரிவாக பார்க்கலாம்!

webteam

1. 15வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்

2. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதங்கள் வழங்க வேண்டிய அகவிலைப்படியை நிறுத்தி வைத்துள்ள அரசாணை ரத்து செய்ய வேண்டும்,

3. 2003 ஏப்ரலுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

strike

4. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

5. ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தை கைவிட வேண்டும்

6. போக்குவரத்து துறையில் வரவு மற்றும் செலவுக்கு இடையேயான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்

ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.

இதுதொடர்பாக கடந்த மாதம் 27 ஆம் தேதி, ஜனவரி 3 மற்றும் 8 ஆம் தேதிகளில், போக்குவரத்து இணை ஆணையருடன் நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பின்னர் அமைச்சர் சிவசங்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.