தமிழ்நாடு

சிவன் புகைப்பிடிப்பது போல கல்யாணத்துக்கு பேனர் வைத்த நண்பர்கள்; குமரியில் பரபரப்பு!

சிவன் புகைப்பிடிப்பது போல கல்யாணத்துக்கு பேனர் வைத்த நண்பர்கள்; குமரியில் பரபரப்பு!

JananiGovindhan

திங்கள்நகர் அருகே சர்ச்சைக்குள்ளான திருமண வாழ்த்து பேனர் குறித்து புதுமாப்பிள்ளை மற்றும் நண்பர்களிடம் இரணியல் கன்னியாகுமரி போலீசார் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரை அடுத்த ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ். தனியார் மீன்வலை கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்தை வாழ்த்தி நண்பர்கள் சார்பில் ஆரோக்கியபுரம் பகுதியில் இரண்டு வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

இதில் ஒரு பேனரில் சிவபெருமான் சிகரெட் பற்ற வைப்பது போன்ற படத்தின் கீழ் “முடி சின்னதா வெட்டி விடுங்க, எவ்வளவு சின்னதா? பொண்டாட்டி கைல புடிக்க முடியாத அளவுக்கு” என்ற வாசகங்களுடன் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இந்த பேனரின் போட்டா சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தாக தெரிகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற இரணியல் போலீசார் சர்ச்சைக்குரிய அந்த பேனரை அகற்றியதோடு பேனர் வைத்த கல்யாண மாப்பிள்ளை மற்றும் அவரது நண்பர்களை விசாரித்து, கண்டித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இயக்குநர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளரான லீனா மணிமேகலை புதிதாக இயக்கியுள்ள ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டரில் காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் ஒரு கையால் புகைப்பிடிப்பது போலவும், மற்றொரு கையால் LGBTQ-க்கான கொடியை பிடித்திருப்பது போலவும் இடம்பெற்றிருந்தன. இது இந்து கடவுளை அவமதிப்பது போல் உள்ளது என பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.