தமிழ்நாடு

"விநாயகரைப் போன்று நாம் சமநிலையாக செயல்பட வேண்டும்"-சத்குரு ஜகி வாசுதேவ்

"விநாயகரைப் போன்று நாம் சமநிலையாக செயல்பட வேண்டும்"-சத்குரு ஜகி வாசுதேவ்

webteam

விநாயகரை போன்று நம் புத்தி கூர்மையாகவும், சமநிலையாகவும் இருந்தால் நம் வாழ்க்கையில் எத்தகைய தடையும் இல்லாமல் ஆனந்தமாகவும், அமைதியாகவும் வாழ முடியும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், " விநாயகர் அல்லது கணபதிக்கு இருந்த சிறிய தலையை எடுத்துவிட்டு பெரிய தலையை வைத்துவிட்டார்கள். பெரிய தலை என்னும்போது அதிக அறிவு, அதிக புத்திசாலித்தனம் என்றே பொருள். எனவே விநாயகரின் புத்தி கூர்மையாகவும் அதேசமயம், சமநிலையாகவும் இருக்கிறது. எப்போது உங்கள் புத்தி கூர்மையாகவும், சமநிலையாகவும் இருக்கிறதோ அப்போது உங்களுக்குத் தடை என்பதே கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"தற்போது கொரோனா வைரஸ் உலகில் கோர தாண்டவம் ஆடிவருகிறது. இலட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மக்கள் பலவித துயரங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நேரத்தில் நம் புத்தி கூர்மையாவும், சமநிலையாகவும் இருந்தால் நம் வாழ்வில் எந்த சவால் வந்தாலும் அதை ஒரு வாய்ப்பாக மாற்றி ஒரு நல்ல வாழ்க்கை வாழ முடியும்" என்றும் சத்குரு தெரிவித்துள்ளார்.