தமிழ்நாடு

கூவத்தூர் பாய்ஸ் பற்றி கவலையில்லை: மைத்ரேயன்

கூவத்தூர் பாய்ஸ் பற்றி கவலையில்லை: மைத்ரேயன்

Rasus

122 கூவத்தூர் பாய்ஸ் பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்றும் மக்களை பற்றித்தான் தாங்கள் கவலைப்படுவதாகவும் மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார்.

சென்னை திநகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தலை திறந்துவைத்த ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்.பி., மைத்ரேயன் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், தொழிற்சாலைகள் தமிழகத்தை விட்டு வெளியேறுவதாகவும் குற்றம் சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என்ற அவர், அவர்கள் அணியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் தெரிவித்தார். சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைவில் முடிவை அறிவிக்கும் என்ற அவர், 122 கூவத்தூர் பாய்ஸ் பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்றும் மக்களை பற்றித்தான் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு மர்ம மரணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன; தமிழக அரசு அதன் பாரம் தாங்காமல் தானாகவே கலையும். சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வரும் என்றும் அவர் சொன்னார்.