தமிழ்நாடு

“நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுத்தர மாட்டோம்” - ஓபிஎஸ் பேச்சு

“நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுத்தர மாட்டோம்” - ஓபிஎஸ் பேச்சு

webteam

சீன பிரச்னை தொடர்பாகப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுத்தர மாட்டோம் என்றார்.

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “லடாக் விவகாரத்தில் பிரதமர், மத்திய அரசு மற்றும் ராணுவத்திற்குத் தமிழகம் துணை நிற்கும். நாட்டின் ஒரு அங்குல நிலப்பரப்பைக் கூட விட்டுத் தர மாட்டோம். நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். இதில் எந்த சமரசமும் இருக்க முடியாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு இந்தியரும் நாட்டை பாதுகாப்பார்கள். நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம். கொரோனா போன்ற தேசிய பேரிடர் நேரத்தில் நாட்டை சிறப்பாக வழிநடத்தும் பிரதமருக்கு நன்றி” என்றார்.