தமிழ்நாடு

உதய் திட்டத்தால் கடனாளி ஆனோம்: ஓபிஎஸ் விளக்கம்

உதய் திட்டத்தால் கடனாளி ஆனோம்: ஓபிஎஸ் விளக்கம்

webteam

பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர்  ரங்கநாதன், தமிழக அரசு கடனில் தத்தளிக்கும் போது , கடன் வாங்கி தேவையற்ற திட்டங்களை நிறைவேற்றுவது தேவையா என பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர்  ஓபிஎஸ் , “ கடனை திருப்பி செலுத்துவதற்கான திறன் அரசிடம் உள்ளது எனவும்,  தமிழகத்தில் கடன் அளவு மத்திய அரசு நிர்ணயித்துள்ள அளவில்தான் உள்ளது எனவும் விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மூலதன திட்டங்களுக்காகவே கடன் பெறப்பட்டுள்ளது என்று கூறிய ஓபிஎஸ், பொதுக்கடனை ரூபாயின் அளவோடு பார்க்காமல் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் 2018-19ம் ஆண்டில் தமிழகத்தில் பொதுக்கடன் அளவு 22.29 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.இது மாற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது ஆந்திராவில் 24.09%, கேரளாவில் 30.7%, உத்திரப்பிரதேசத்தில் 29.78%, மேற்கு வங்கம் 36.61% என உள்ளதாக தெரிவித்தார்.

உதய் திட்டத்தில் தமிழகத்தை இணைத்ததால், தமிழகத்தில் 2016-17ம் ஆண்டில் கடன் அளவு 20.27% ஆக உள்ளதாகவும் , சுமார் 4439 கோடி ரூபாய் உதய் திட்டத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அனைத்து கடனையும் திருப்பி செலுத்தும் திறன் தமிழக அரசுக்கு உள்ளது என்றும் பன்னீர்செல்வம் பதிலளித்தார்.