தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்காக காத்திருக்கிறோம்- வேதாந்தா

ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்காக காத்திருக்கிறோம்- வேதாந்தா

webteam

தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நிகழ்ந்த அசம்பாவிதங்களால் பெரும் வேதனை அடைந்திருப்பதாகவும் இதற்காக வருந்துவதாகவும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைப்பெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், தற்போதைய பதட்டமான சூழலில் தங்கள் ஆலைக்கும் ஆலை ஊழியர்களுக்கும் ஆலையை சுற்றியுள்ளோருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென அரசை கேட்டுக்கொள்வதாக வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது. தற்போதைய நிலையில் ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் உள்ளதாகவும் ஆலையை இயக்க உரிய அனுமதிக்காக காத்திருப்பதாகவும் வேதாந்தா கூறியுள்ளது