தமிழ்நாடு

“தொழில்துறையில் தொடர்ந்து முன்னேறி வருகிறோம்” - தமிழக அரசு

Rasus

தொழில்துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னேறிவருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழகத் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌, கோடிக்‌கணக்கில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்க மூன்று முதல் 7 ஆண்டுகள் ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி உலக முதலீட்டாளர்கள் முதல் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த ஐடிசி, லோட்டஸ் காலணி தொழிற்சாலை ‌உள்பட 68 நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் பணிகளை தொடங்கி விட்டதாகவும், இதன்மூலம் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 27 நேரடி வேலை வாய்ப்புகளும், பல லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்தாண்டு ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகவும், முதல்வெற்றியாக சியட் டயர்ஸ் நிறுவனம் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், குஜராத் மாநிலத்தில் இருந்து மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக அமைச்சர் எம்.சி சம்பம் தெரிவித்துள்ளார்.