தமிழ்நாடு

குடிநீர் பிரச்னையா? ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்

குடிநீர் பிரச்னையா? ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்

webteam

ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளைப் போல, மக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகான சென்னை குடிநீர் வாரியம் ட்விட்டர் பக்கத்தில் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளது.

அதில், குடிநீர் லாரிகள் வராதது, சாலையில் மழைநீர் தேங்கி நிற்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டால் உடனுக்குடன் தீர்வுகாணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை வாழ் மக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் தொடர்பான பிரச்னைகள் இருப்பின், அதனை @CHN_Metro_Water என்றட்விட்டர் பக்கத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

சில தினங்களுக்கு முன்பு சென்னை குடிநீர் வாரியம் தொடங்கிய இந்த ட்விட்டர் பக்கத்தை, தற்போதுவரை ஆயிரத்து 491 பேர் பின்தொடர்ந்துள்ளனர். அதேநேரம், குடிநீர் பிரச்னை குறித்து கடுமையான விமர்சனங்களுடன் பதிவுகள் வெளியாவதும் குடிநீர் வாரிய அதிகாரிகளை திக்குமுக்காட வைத்துள்ளது.