தமிழ்நாடு

மஞ்சளாறு அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை

மஞ்சளாறு அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை

webteam

பெரியகுளம் மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியை எட்டியதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந் நிலையில், நேற்று காலை 9 மணியளவில் அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியது. இதனால் மஞ்சளாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பின்பு அணையில் இரண்டு மதகுகள் மூலம் அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 
இதனால் அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே வெளியேற்றுகின்றனர். அணைக்கு நீர் வரத்தானது வினாடிக்கு 94 அடியாக உள்ள நிலையில் 94 கன அடி வெளியேற்றப்படுகிறது. மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து மேலும் உயரும் எனபதால் பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.