தமிழ்நாடு

தண்ணீர் பிரச்னை: முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது

தண்ணீர் பிரச்னை: முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது

webteam

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. 

தமிழகத்தில் பருவமழை பொய்த்த நிலையில் மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டுவிட்டதால், விவசாய கிணறுகள் மற்றும் கல்குவாரி நீர் மூலம் தண்ணீர் கொண்டுச்செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிகையில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் தமிழகம் முழுவதும் குடிநீர் வழங்குவதற்காக 233 கோடியே 72 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித் திருந்தார்.

இந்நிலையில், குடிநீர் பிரச்னை குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்பட்டி ருந்தது. அதன்படி இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வரும் நிலையில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

தலைமை செயலகத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், வேலுமணி, உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.