செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இருந்து திறக்கப்படும் நீரின் அளவு, 2,500 கன அடியில் இருந்து, 6,000 கன அடியாக இன்று காலை உயர்த்தப்பட்டது. இதுகுறித்து ‘செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3,098 கன அடியாக அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு நலன் கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீர்வரத்து பின் குறைந்ததால், நீர்த்திறப்பின் அளவு மீண்டும் 4,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
இதனால் கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.53 அடியாகவும், நீர் இருப்பு 3,256 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
இதேபோன்று புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 9:30 மணியளவில் அது 2000 கன அடியாக உயர்த்தப்பட்டது. முன்னதாக 8 மணியளவில் இது 1,000 கன அடியாக உயர்த்தப்பட்டிருந்தது.
தற்போது ஏரிக்கு வினாடிக்கு 400 கன அடி நீர்வரத்து உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 20.31 அடியாகவும், நீர் இருப்பு 3,074 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.