தமிழ்நாடு

புதிய வகுப்பறை கட்டடங்களில் நீர்க்கசிவு: பொதுமக்கள் சாலைமறியல்

Rasus

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டதால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சுண்டிபள்ளம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 11 லட்சத்து 80,000 மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடத்தை கடந்த 2-ஆம் தேதிதான் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த சில நட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக புதிய வகுப்பறை கட்டடத்தில் ஆங்காங்கே நீர்க்கசிவு உள்ளதால் வகுப்பறை ஈரமாக உள்ளது. இன்று பள்ளிக்கு மாணவர்களை அழைத்து சென்ற பெற்றோர்கள் வகுப்பறை ஈரமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இப்படி ஈரமாக இருந்தால் எப்படி மாணவர்களால் கல்வி கற்க முடியும் என்ற கேள்வி எழுப்பிய மக்கள், இதனை கண்டித்து சென்னை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மீன்சுருட்டி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கட்டடத்தை சீர் செய்து தருவதாக கூறினர். இதன்பின் மக்கள் தங்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.