முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்னும் ஒரு அடி உயர்ந்தால் தமிழக பாசனத்திற்கான நீர்த்திறப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்னும் ஒரு அடி உயர்ந்தால் தமிழக பாசனத்திற்கான நீர்த்திறப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 116 அடியை நெருங்கி வருகிறது. மேலும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 258 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் குடிநீருக்காக விநாடிக்கு 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 117 அடியானதும் தமிழக அரசுக்கு தகவல் அனுப்பி பாசனத்திற்கான நீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணையின் நீர்மட்டம் 116 அடியை நோக்கி உயர்ந்து வருவதால், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் பாசன வசதிகளை ஏற்படுத்தி எதிர்பார்ப்பில் உள்ளனர்.