ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 48 விசை படகு மீனவர்கள் கரை திரும்பாத்தால் கடலோர காவல்படை சார்பில் எச்சரிக்கை அளிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 48 விசை படகு மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில் புயல் குறித்த எச்சரிக்கை அளிக்கும் வீடியோ மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து தொடர்ந்து புயலாக மாறும் என்ற வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 646 விசை படகுகளில் சுமார் 80 சதவீத படகுகள் கரை திரும்பி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 48 விசை படகுகள் கரை திரும்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அரபிக்கடல் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு கடற்படை மற்றும் கடலோர காவல்படை சார்பில் எச்சரிக்கை அளிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.