boat pt desk
தமிழ்நாடு

ஆரஞ்ச் அலர்ட்: மயிலாடுதுறை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

webteam

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்...

"இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய காற்று வீசக்கூடும். கடல் கொந்தளிப்புடன் 1.5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

Boat

கரையோரம் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கடலில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம். காற்றின் வேகத்தால் படகுகள் சேதமடையக் கூடும் என்பதால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் கன்னியாகுமரி கடலோர மீனவர்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Fisherman

இதனால் கடல் அலை 2 மீட்டர் முதல் 4 மீட்டர் உயரமும் கொண்ட பேரலைகள் எழக்கூடும் என்பதால் குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை சுற்றுலா தலங்களில் உள்ள கடலில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.