தமிழ்நாடு

புயலால் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா? - வேளாண்துறை ஏற்பாடு

புயலால் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா? - வேளாண்துறை ஏற்பாடு

webteam

புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த விவசாயிகள் உழவன் செல்போன் செயலி மூலம் பயன்பெறலாம் என வேளாண்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 

கடந்த 16-ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு வரலாறு காணாத பேரழிவை டெல்டா மாவட்ட மக்கள் சந்தித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் ஊடுருவிய கஜா புயல், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும், உறவாக வளர்த்து வந்த ஆடு, மாடுகளையும் சூறையாடி சென்றுள்ளது.

பல்வேறு அரசியல் கட்சிகளும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களும் நிதி அளித்துள்ளனர். சினிமா துறை, தொழில் துறை பிரபலங்கள் பலரும் முதலமைச்சரை சந்தித்து புயல் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

மின் ஊழியர்களும், வேளான்துறை ஊழியர்களும் இரவு பகல் பாராமல் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த விவசாயிகள் உழவன் செல்போன் செயலி மூலம் பயன்பெறலாம் என வேளாண்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்களின் செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை - 9443463976, திருவாரூர் - 7399753318, நாகை - 9443655270, புதுக்கோட்டை - 9443532167. 

கஜா புயலால் விழுந்துள்ள மரங்களை நல்ல விலைக்கு விற்று பயன்பெற வேளாண்மைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தொடர்புகொள்ள: புதுக்கோட்டை: சத்தியமூர்த்தி - 9442591433, நரேஷ் - 9442591409, தஞ்சை: சுரேஷ் - 9442591417, நாகை: ரவி - 9442591408, சிவகங்கை: பிரபாகரன் - 9442591416