தமிழ்நாடு

VPF கட்டணத்தில் 50% வரை 3 மாதங்கள் சலுகை - தயாரிப்பாளர்களுக்கு குறையும் சுமை

VPF கட்டணத்தில் 50% வரை 3 மாதங்கள் சலுகை - தயாரிப்பாளர்களுக்கு குறையும் சுமை

கலிலுல்லா

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள தயாரிப்பாளர்களின் படங்களுக்கு VPF கட்டணத்தில் மூன்று மாதங்கள் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களை திரையிட Qube,UFO உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள் VPF என்ற கட்டணத்தை தயாரிப்பாளர்களிடம் வசூலிக்கின்றனர். இது பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு 50 முதல் 70 லட்சம் வரையிலும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு 20 லட்சம் வரையும் கூடுதல் செலவாகிறது என தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த கொரோனா ஊரடங்கு முடிவடைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டபோது டிஜிட்டல் நிறுவனங்கள், VPF கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சலுகையாக வழங்கினர். அதே போல் இந்த முறை தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தினர் டிஜிட்டல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அந்த சங்கத்தின் பரிந்துரை கடிதம் வைத்துள்ள தயாரிப்பாளர்களுக்கு 50% வரை VPF கட்டணத்தில் மூன்று மாதங்களுக்கு சலுகை வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்களின் கூடுதல் செலவு சற்றுக் குறையும் என்று கூறப்படுகிறது.