தமிழ்நாடு

இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

webteam

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார்

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். தலைவர் பொறுப்பில் இருந்த விக்ரமன் பதவிக் காலம் முடிவுக்கு வந்த நிலையில், புதிய நிர்வாகத்தை தேர்வு செய்ய‌ தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, சி.வி.வித்யாசாகர் ஆகிய இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

ஏற்கெனவே சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியில்லாத காரணத்தால் ஆர்.வி.உதயகுமார் தேர்வானார். இதேபோல, பொருளாளர் பதவிக்கு இயக்குநர் பேரரசு போட்டியின்றி‌ தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா உள்ளிட்டோர் போட்டியில் உள்ளனர். 

அதன்படி இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை நிறைவுபெற்றது. தபால் வாக்குகள் 6 பதிவாகி இருந்த நிலையில் மொத்தம் 1503 வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிவில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி 1386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.