தமிழ்நாடு

“கட்டாயம் திரும்ப வருவேன்” - அதிமுக பெண் நிர்வாகியிடம் பேசிய சசிகலா

நிவேதா ஜெகராஜா

மயிலாடுதுறையைச் சேர்ந்த அதிமுக பெண் நிர்வாகியிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதிமுக மகளிர் அணியின் மயிலாடுதுறை மாவட்ட இணைச் செயலாளர் சுமதியுடன் சசிகலா செல்போனில் பேசியுள்ளார்.

அந்த ஆடியோவில் ‘அதிமுக ஒருங்கிணைப்பாளர் கட்சியாக மாறிவிட்டது’ என மயிலாடுதுறை மாவட்ட இணைச் செயலாளர் சுமதி, சசிகலாவிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். அதற்கு சசிகலா, தாம் கட்டாயம் திரும்பி வர இருப்பதாகவும், எம்ஜிஆர் கூறியதைப்போல தொண்டர்கள் மூலம் அதிமுகவின் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க உள்ளதாக சமாதானம் கூறுகிறார்.