தமிழ்நாடு

சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள்: சின்னம் மறுக்கப்பட்டதாக கமல் ஆவேசம்

சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள்: சின்னம் மறுக்கப்பட்டதாக கமல் ஆவேசம்

Veeramani

புதுச்சேரிக்கு மட்டும் மக்கள் நீதி மய்யத்துக்கு “பேட்டரிடார்ச்” சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அச்சின்னம் ஒதுக்கப்படவில்லை.

இது தொடர்பாக பேசிய கமல்ஹாசன் “ எங்களுக்கு தமிழகத்தில்  “பேட்டரி டார்ச்” சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள், கட்சி ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்திய ஜனநாயகம் நோய்வாய்ப்பட்டுள்ளது, அதனால் எங்கள் கட்சியில் நிறைய மருத்துவர்கள் இருக்கிறார்கள். நேர்மை மட்டும்தான் எங்கள் யுக்தி, பணத்திற்காக வாக்குகளை விற்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்

அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு, 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம். 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு “பிரஷர் குக்கர்” சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு “ கரும்பு விவசாயி” சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யத்துக்கு புதுச்சேரியில் மட்டும் “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.