தமிழ்நாடு

நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்றக் காவல்!

நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்றக் காவல்!

webteam

பேராசிரியை நிர்மலா தேவியை ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான‌ பாதைக்கு தூண்டிய பேராசிரி‌யை நிர்மலா தேவியிடம் தொடர் விசாரணை நடைபெற்றது. தேவாங்கர் கல்லூரி‌ நிர்வாகம் காவல் துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று இரவு நிர்மலா தேவி, அவரது வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்ப, நிர்மலா மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விசாரணையில் இருந்த நிர்மலா தேவி விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே நிர்மலா தேவியை விசாரிக்க ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் சந்தானம் என்பவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.