ராதிகா சரத்குமார் ட்விட்டர் | @realradikaa
தமிழ்நாடு

விருதுநகர் | ராதிகாவுடன் இணைந்து தர்ணாவில் ஈடுபட்ட பாஜகவினர்... நடந்தது என்ன?

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ், பாஜக நிர்வாகிகள் போட்டி போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

PT WEB

விருதுநகர் தந்தி மரத் தெருவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகாலட்சுமி திட்டத்திற்கான உத்தரவாத அட்டையை காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் வழங்கியுள்ளார். இதுதொடர்பான விவகாரத்தில் இருதரப்பினரும் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் இரு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

காத்திருப்பு போராட்டத்தில் பாஜக-வினர்

இதனால் அங்கு பதற்றம் நிலவியது. காங்கிரஸ் புகாரை பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் உள்பட பாஜக தொண்டர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியினரும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் மேலும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பின் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அலுவலர் உறுதி அளித்ததை அடுத்து பாஜக வேட்பாளர் ராதிகா உள்பட நிர்வாகிகள் பலரும் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அப்போது எதிரே வந்த காங்கிரஸ் நிர்வாகியின் காரை முற்றுகையிட்டு பாஜகவினர் வாக்குவாதம் செய்தனர். பின்னர் காவல்துறையினர் தலையிட்டு காரில் இருந்தவர்களை வழியனுப்பி வைத்தனர்.