தமிழ்நாடு

விமானத்திற்குள் சுற்றிச்சுற்றிப் பறந்த புறா - வீடியோ காட்சி

விமானத்திற்குள் சுற்றிச்சுற்றிப் பறந்த புறா - வீடியோ காட்சி

webteam


‘கோ ஏர்’ விமானத்திற்குள் புறா பறப்பதை ஒருவர் பிடிக்க முயற்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அகமதாபாத்தில் இருந்து ஜெய்ப்பூருக்குப் புறப்பட தயாராக இருந்த ‘கோ ஏர்’ விமானத்திற்குள் திடீரென்று ஒரு புறா உள்ளே நுழைந்து. இதனால் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக விமானம் புறப்படுவது தாமதமானது. இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. விமானத்திற்குள் இருந்த பயணி ஒருவர் அதனை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் அந்த வீடியோவில் விமானத்திற்குள் பறக்கும் புறாவை ஒருவர் எக்கி பிடிக்க முயற்சிக்கிறார். அதைக் கண்ட விமானத்தில் இருந்த பல பயணிகள் அதைப் பிடிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அந்தப் புறா குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து கொண்டே இருக்கிறது. இந்தப் புறா விமானத்தில் எவ்வாறு நுழைந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடும் போராட்டத்திற்குப் பிறகு விமானத்தின் கதவைத் திறந்து புறா இறுதியாக வெளியேற்றப்பட்டது. இது குறித்து ‘கோ ஏர்’ விமானத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ‘விமானம் திட்டமிட்ட நேரத்தில் புறப்பட்டுவிட்டது’ என்றார்.

கோ ஏர் தனது பயணிகளுக்கு ஏதேனும் அசெளகர்யம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறது என்று கூறியுள்ளது.