விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை சர்ச்சை புதிய தலைமுறை
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை... சுற்றுச்சூழல்துறை விளக்கம்!

PT WEB

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அரசுப் பள்ளிகளில், "சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம்" என்ற உறுதிமொழியை ஏற்க திருச்சி, பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர்.

இதற்கு ஆசியர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து தங்கள் தரப்பில் இருந்து நேரடியாக எந்த அறிவுறுத்தலும் செய்யவில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்திருந்தது.

இதனிடையே, தவறான புரிதலின் பெயரில் ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல்துறை முதன்மைச் செயலாளர் விளக்கமளித்துள்ளர்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சுற்றறிக்கை ஆண்டு தோறும் விழா ஏற்பாட்டாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு வெளியிடப்படும்.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை

அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தவறாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பது அரசின் ஆணைகளுக்கு முரணானது என்பதால், அது ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.