விழுப்புரம் மாவட்டத்தில் கத்தியை காட்டி வழிபறி செய்த இளைஞரை சுற்றிவளைத்து அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் பொதுமக்கள்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியடுத்த பொன்பத்தி, மேல் எடையாளம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கத்தியை காட்டி வழிபறி கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ளார் ஒருவர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த அய்யனார் (வயது 25) என்ற அந்த இளைஞர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கத்தியை காட்டி தொடர் வழிபறியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். நேற்று மாலை என்.ஆர்.பேட்டை என்ற பகுதியில், ஆசைதம்பி என்பவருக்கு சொந்தமான மாட்டுதீவன கடையில் கத்தியை காட்டி கொள்ளையடித்துள்ளார்.
இதனைதொடர்ந்து மேல்எடையாளம் எனும் இடத்தில் காசி என்ற விவசாயிடம் கத்திகாட்டி செல்போன் பறிக்க முயன்றிருக்கிறார். அப்போது பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து அடி கொடுக்க தொடங்கியுள்ளனர். சராமாரியான தாக்குதலுக்கு உள்ளான அவர் பற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, அய்யனாரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க... விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!