தமிழ்நாடு

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற மார்கழி மாத ஊஞ்சல் உற்சவம்

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற மார்கழி மாத ஊஞ்சல் உற்சவம்

kaleelrahman

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மார்கழி மாத ஊஞ்சல் உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் பிரிசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும்.இத்திருதலத்தில் மாதம் தோறும் அமாவாசை தின நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழக பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் தங்கள் குடும்பத்தினருடன் அம்மன் திருத்தலத்தில் தங்கி அருள் பெற்றுச் செல்வதை பாக்கியமாக கருதி வந்தனர்.

இந்நிலையில் உலககெங்கும் கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்த கடந்த 2019 மார்ச் மாதம் முதல் ஊஞ்சல் உற்சவம் நிறுத்தப்பட்டு திருகோயில் வளாகத்தில் பக்தர்கள் யாருமின்றி எளிய முறையில் ஊஞ்சல் உற்சவத்தை இன்று வரை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து; மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர். நெய் பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். மாலையில் உற்சவர் அங்காளம்மனுக்கு ஜகத்ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு கோயில் உட்பிரகாரத்தில் ஊஞ்சலில் அம்மனை அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடி வணங்கினர்.