தமிழ்நாடு

“கட்டட வேலை செய்ய சொல்கிறார்”- விழுப்புரம் விளையாட்டு விடுதியில் படிக்கும் மாணவர்கள் வேதனை

kaleelrahman

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழுப்புரத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கில் தங்கி படிக்கும் மாணவர்களை வெள்ளை அடிக்கவும், கட்டிட வேலை செய்யவும் அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கி கல்வி கற்பதற்கு ஏதுவாக மாவட்டம் தோறும் விளையாட்டு அரங்கம் மற்றும் விடுதி அமைத்து மாணவர்களை தங்கவைத்து அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் கூடைப்பந்து, தடகளம், கபடி போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தங்கி படிக்கும் மாணவர்களை மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகன் விளையாட்டு அரங்கிற்கு வெள்ளை அடிக்கவும் விளையாட்டு அரங்கில் நடைபெறும் கட்டிட பணிகளுக்கும் மாணவர்களை ஈடுபடுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது மாணவர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. விளையாட்டு பயிற்சியில் பெரிய முன்னேற்றம் ஏற்படாத விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்காமல் இப்படி கட்டுமானப் பணிகளுக்கும் வெள்ளையடிக்கும் பணிகளுக்கும் மாணவர்களை பயன்படுத்துவதால் அவர்களின் விளையாட்டு ஆர்வம் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே அதிகாரி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகனிடம் கேட்டபோது பொது கழிவறை மற்றும் பொது கட்டிடங்களை அவர்களே சீரமைப்தில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேட்டுள்ளார்.