தமிழ்நாடு

நடுங்க வைக்கும் கொலைவெறித் தாக்குதல்கள்: நிம்மதியின்றி போராடும் மக்கள்!

நடுங்க வைக்கும் கொலைவெறித் தாக்குதல்கள்: நிம்மதியின்றி போராடும் மக்கள்!

webteam

வெள்ளம்புதூரில் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய, 3வது நாளாக கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புதூரில் ஒரு குடும்பத்தின் மீது நடந்த கொலைவெறி தாக்குதலில் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியும், தாக்கப்பட்ட தாயும் உயிருக்கு போராடி வருகின்றனர். இதற்கு முன்னரும் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் அப்பகுதியில் நடந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

கடந்த மாதம் 22ஆம் தேதி நடந்த இக்கொலைவெறி தாக்குதலில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாதால், தங்களால் நிம்மதியாக வாழமுடியவில்லை என கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடந்து 13 நாட்கள் ஆகியும், வழக்கில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிய அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம், இன்று 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.